சாலையில் தேங்கிய மழைநீர் 2 நாட்களாகியும் வடியாத அவலம்

0 434

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சாலையில் தேங்கிய மழைநீர் 2 நாட்களாகியும் வடியாததால், நடவடிக்கைக் கோரி அப்பகுதி மக்கள் சாலையில் நாற்றுநடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியாத்தம் அருகே தட்டப்பாறை கிராமத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், அரசு மேல்நிலைப்பள்ளியும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மழை பெய்ததில், சாலையில் நீர் தேங்கியது.

2 நாட்கள் கழித்தும் மழைநீர் வடியாத நிலையில், கழிவுநீரும் கலந்து சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

வடிகாலும், கழிவுநீர் கால்வாயும் இல்லாததே இதற்கு காரணம் என குற்றம்சாட்டும் அப்பகுதி மக்கள், சாலைகளில் தேங்கியுள்ள நீரில் நாற்றுநடும் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

மேலும் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments