முகத்தில் பலத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட 4 வயது சிறுமி

0 729

திருவள்ளூரில் தனியார் செங்கல் சூளையில் வேலை செய்து வரும் ஒடிசா மாநில தம்பதியின் 4 வயது மகள் முகத்தில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர், வெள்ளவேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருக்கும் தனியார் செங்கல் சூளையில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 25 பேர் தங்கி வேலை செய்து வருகின்றனர்.

அவர்களுள் ஒரு தம்பதியின் 4 வயது மகளை அவர்களது உறவினர்களான நிலக்கர் மற்றும் சந்தரவனம் ஆகியோர் நேற்று பிற்பகல் 2 மணியளவில் கடைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவர்கள் மாலை வரை வீடு திரும்பாததால் சிறுமியின் தந்தை தேடி சென்றுள்ளார்.

அப்போது நிலக்கரும், சந்தரவனமும் ஓரிடத்தில் மது அருந்திக்கொண்டு இருந்துள்ளனர். அவர்கள் அச்சிறுமியின் தந்தை கேட்ட கேள்விக்கு சரியான பதில் அளிக்காததால் திரும்பி வந்த சிறுமியின் தந்தை, உறவினர்களுடன் சேர்ந்து தனது மகளை இரவெல்லாம் தேடி உள்ளார்.

ஆனால் சிறுமி கிடைக்காததால் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை செங்கல் சூளையின் பின்புறம் இருக்கும் முள்புதர் அருகே முகத்தில் பலத்த காயங்களுடனும், உடலில் இரத்த கரைகளுடனும் சிறுமி சடலமாக கிடப்பதை அங்கு வேலை செய்பவர்கள் பார்த்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அளிக்கப்பட்டதையடுத்து அங்கு வந்த போலீசார், சிறுமியின் உடலை கைப்பற்றி பிரதேச பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வரும் போலீசார், அச்சிறுமியை கடைக்கு அழைத்து சென்ற இருவர் உட்பட 3 உறவினர்களை கைது செய்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT