காவிரி ஆற்று குடிநீர் தேவைக்காக பவானிசாகர் அணை திறப்பு

0 568

காவிரி ஆற்று குடிநீர் தேவைக்காக ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து விநாடிக்கு ஆயிரம் கனஅடி நீர் கூடுதலாக திறக்கப்பட்டுள்ளது.

105 அடி உயரமும், 32 புள்ளி 8 டிஎம்சி கொள்ளளவும் கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி 59 புள்ளி 03 அடியாகவும், நீர் இருப்பு 6 புள்ளி 9 டிஎம்சியாகவும் இருந்தது.

image

அணையிலிருந்து ஏற்கனவே குடிநீர்த்தேவைக்காக 205 கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், காவிரி டெல்டா பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளதால், நேற்று இரவு முதல் கூடுதலாக ஆயிரம் கனஅடி வீதம் பவானி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments