உலக கோப்பை இறுதி போட்டியில் முதல்முறையாக சூப்பர் ஓவர்..! அதுவும் டிரா... கோப்பையை தட்டியது இங்கிலாந்து

0 3484

லகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், நியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது. 

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, லண்டனில் மே 30ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. பத்து அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் இறுதிச் சுற்றுக்கு நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் தகுதி பெற்றன. நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

50 ஓவர்களில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹென்றி நிக்கோல்ஸ் 55 ரன்களும், லாத்தம் 47 ரன்களும் சேர்த்தனர். வோக்ஸ்- பிளங்க்கெட் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்த நிலையில், பென் ஸ்டோக்ஸ்- பட்லர் பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தனர்.

image

மறுமுனையில் வீரர்கள் ஆட்டமிழக்க, பென் ஸ்டோக்ஸ் நிதானமாக வெற்றியை நோக்கி அணியை இட்டுச் சென்றார். ஆயினும் 50 ஓவர்களில் இங்கிலாந்து அணி 241 ரன்களில் ஆட்டமிழந்ததால் ஆட்டம் டை-யில் முடிந்து பரபரப்பு தொற்றிக் கொண்டது.

வெற்றி யாருக்கு என்பதை தீர்மானிக்க வீசப்பட்ட சூப்பர் ஓவரிலும் இரு அணிகளும் 15 ரன்கள் எடுத்ததால், அதிக பவுண்டரிகளை எடுத்த இங்கிலாந்து கோப்பையைக் கைப்பற்றியது

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம் வெல்வது இதுவே முதன்முறையாகும். நியூசிலாந்தைப் பொறுத்தவரை இரண்டாவது முறையாக உலகக் கோப்பை வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது. இங்கிலாந்து அணி உலகக் கோப்பையை வென்றதும், லண்டனில் வெற்றிக் கொண்டாட்டங்கள் களைகட்டின.

image

இங்கிலாந்து அணி வீரர்களுக்கு ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் இருந்தன. இதுவரை நடைபெற்ற போட்டிகளிலேயே மிகச் சிறந்த இறுதிப் போட்டி என நெட்டிசன்கள் வர்ணித்திருந்தனர். கடைசிவரை கடுமையாகப் போராடிய நியூசிலாந்து அணிக்கும் ஏராளமானோர் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT