ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டாம் என்பதே ரசிகராக தன்னுடைய ஆலோசனை

0 1055

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டாம் என்பதே ரஜினி ரசிகராக தன்னுடைய ஆலோசனை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஊடக பிரிவின் மாநில நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற பொறுப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் சஞ்சய் தத், மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரியிடம், வேலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக ரஜினி ரசிகர்கள் செயல்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் யார் என்பதை ரஜினி ரசிகர்கள் முடிவு செய்ய முடியாது எனக் கூறினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments