ஏழுமலையான் கோவிலில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தரிசனம்

0 472

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தரிசனம் செய்தார்.

நேற்று மாலை திருமலை வந்தடைந்த குடியரசுத் தலைவர் பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கினார். இந்நிலையில் இன்று காலை கோவிலின் முன்வாசலுக்கு வந்த அவருக்கு மிக முக்கிய பிரமுகர்களுக்கு மட்டுமே அளிக்கப்படும் சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து அவர் பலி பீடம், கொடிமரம் ஆகிவற்றை வணங்கி ஏழுமலையானை வழிபட்டார். அப்போது ஐதீக ஆரத்தி என்ற வகையில் அர்ச்சகர்கள் ஏழுமலையானின் பாதம் முதல் வைர கிரீடம் வரை ஒவ்வொரு பாகத்திற்கும் ஆரத்தி காண்பித்தனர். அதனைத் தொடர்ந்து கோவில் சார்பில் அவருக்கு தீர்த்த பிரசாதங்களும், பண்டிதர்கள் மூலம் வேத ஆசியும் வழங்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT