மக்கள் இணைந்து வளர்ச்சிப்பணியை செய்ய வேண்டும் - குடியரசு துணை தலைவர் வெங்கையாநாயுடு

0 283

அனைத்தையும் அரசு செய்யும் என்று எதிர்பார்க்காமல் மக்கள் இணைந்து அவர்களால் முயன்ற வளர்ச்சிப்பணியை  செய்ய வேண்டும் என்று குடியரசு துணை தலைவர் வெங்கையாநாயுடு வலியுறுத்தினார்.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணாபல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தா அரங்கில், ஸ்ரீரங்கம் ரெங்கநாத சாமி  கோயில் குறித்து டிவிஎஸ் குழும தலைவர் வேணு சீனிவாசன் எழுதிய புத்தகத்தை  துணை குடியரசு தலைவர் வெங்கையாநாயுடு வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்., அமைச்சர்கள் சேவூர் ராமச்சந்திரன், ஆர்பி உதயகுமார், பாண்டியராஜன், ஜெயக்குமார் மற்றும் ஆடிட்டர் குருமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

புத்தகத்தை வெளியிட்ட பின் பேசிய வெங்கையாநாயுடு, முறைந்த முதலமைச்சர் ஜெயலிதாவின் வேண்டுகோளான ஸ்ரீரங்கம் நகரத்தை பாரம்பரிய நகரமாக அறிவிக்கவேண்டும் என்ற கோரிக்கையை மட்டும் ஏற்க முடியாமல் போனது என்றார். 

அப்போது 10 நகரங்களை மட்டுமே பாரம்பரிய நகரமாக அறிவிக்க நிதி ஒதுக்கப்பட்டிருந்ததே அதற்கு காரணம் என்று அவர் விளக்கம் அளித்தார். அனைத்திற்கும் அரசை எதிர்பார்த்து மக்கள் காத்திருக்க கூடாது என்று அவர் கேட்டுக்கொண்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments