இந்தி தொலைக்காட்சி நடிகர் ராம்கபூரின் புதிய தோற்றம்

0 573

இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான நடிகர் ராம்கபூர் தனது உடல் எடையை குறைத்த பின் தற்போதைய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். 2 ஆண்டுகளுக்கு முன் 130 கிலோ எடையுடன் பருமனாக இருந்த 45 வயதான ராம்கபூர், தற்போது கச்சிதமான உடல் அமைப்புடன் காட்சி அளிக்கிறார்.

தனது உடல் எடை குறைப்புக்கு 16-8 என்ற உணவு முறையை பின்பற்றியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த முறைப்படி ஒருவர் 8 மணி நேர இடைவெளியில் மட்டும் உணவு எடுத்துக் கொண்டு, 16 மணி நேரம் எந்த உணவும் சாப்பிடாமல் இருக்க வேண்டும்.

8 மணி நேரத்தில் வழக்கமாக சாப்பிடும் உணவையே எடுத்துக் கொள்ளலாம். இடைப்பட்ட விரதம் போன்ற 16 மணி நேரத்தில் உடலில் உள்ள கொழுப்பு எரிக்கப்பட்டு கரைக்கப்படுகிறது.

இலினாய்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சிலும் இந்த முறை சிறந்த பலனளிப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. உடல் எடையை குறைப்பது மட்டுமின்றி, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரையின் அளவையும் கட்டுப்படுத்தவும் 16-8 உணவு முறை உதவுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ஏற்கனவே மருந்து எடுத்துக்கொண்டிருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி செயல்படுவது நல்லது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments