சுவாசக் கோளாறால் தவித்த குழந்தையை காப்பாற்றிய அதிகாரி

0 1614

அமெரிக்காவில் அதிவேகமாக வந்த காரை நிறுத்திய காவல் அதிகாரி, அதனுள் சுவாசக் கோளாறால் தவித்து கொண்டிருந்த பிறந்து 12 நாட்களே ஆன குழந்தையை முதலுதவி செய்து காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு கரோலினாவின் பெர்க்லி கவுண்டியில் பணியில் ஈடுப்பட்டிருந்த வில் கிம்ப்ரோ என்ற அதிகாரி அப்பகுதியில் அதிவேகமாக வந்த காரை தடுத்து நிறுத்தினார்.

மேலும் ஓட்டுநரை கீழே இறக்கி விசாரித்ததில், பிறந்து 12 நாட்களே ஆன குழந்தை சுவாசக்கோளாறால் பாதிக்கப்பட்டதாகவும் அதனை மருத்துவமனைக்கு கொண்டு செல்லவே அதிவேகமாக சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து குழந்தையின் தாயின் மடியில் வைத்து, அதிகாரி கிம்ரோ குழந்தைக்கு முதலுதவி அளித்துள்ளார். இதையடுத்து ஆக்சிஜன் பற்றாக்குறையால் நீலம் பூத்தும் போயிருந்த குழந்தையின் உடலில் அசைவு தெரிந்தது. பின்னர் தானே மூச்சு விட்ட குழந்தை அழத் துவங்கியது.

இதையடுத்து மருத்துவக் குழுவினரை வரவழைத்து குழந்தைக்கு சிகிச்சை அளிக்கவும் அதிகாரி கிம்ரோ ஏற்பாடு செய்துள்ளார்.

அவரது சீருடையில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவான இந்தக்காட்சிகளை, பெர்க்லி கவுண்டியின் போக்குவரத்து கட்டுப்பாட்டு அலுவலகம் தற்போது வெளியிட்டுள்ளது.

இதனால் அதிகாரி பெர்க்கிலிக்கு பாராட்டுகள் குவிந்து வரும் சூழலில், அவருக்கு பாராட்டு பதக்கமும் வழங்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments