நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் மதிக்காதது துரதிர்ஷ்டவசமானது

0 337

நில ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கில், நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் மதிக்காதது துரதிர்ஷ்டவசமானது என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

ராமநாதபுரம், திருவாடனை, கனட்டான்காடு பகுதியை சேர்ந்தவர் லெட்சுமி. இவருக்கு நிலமற்ற ஏழைகள் பிரிவில் அரசு சார்பில் கடந்த 2007ம் ஆண்டில் 17 செண்ட் நிலம் ஒதுக்கப்பட்டது. அந்த இடத்தை சிலர் ஆக்கிரமித்திருந்தனர்.

ஆக்கிரமிப்பை அகற்றி எல்லையை நிர்ணயம் செய்யக்கோரி வருவாய் அதிகாரிகளுக்கு 2015-ல் மனு அளித்தார். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரரின் மனுவை பரிசீலிக்க 2015-ல் உத்தரவிட்டது. அதன் பிறகும் நடவடிக்கை எடுக்காத நிலையில் லெட்சுமி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார் ,"நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் மதிக்காதது துரதிர்ஷ்டவசமானது எனவும், பொதுமக்களின் கோரிக்கையை தாலுகா அளவிலான வருவாய்த்துறை அதிகாரிகள் எப்படி அணுகுகின்றனர் என்பதற்கு இந்த வழக்கு ஒரு சிறந்த உதாரணமாக உள்ளது எனவும் தெரிவித்தார்.

வருவாய் துறை அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வேண்டும் எனவும், பொதுமக்கள் சின்ன சின்ன விஷயங்களுக்கும் நீதிமன்றத்திற்கு வர வேண்டியதுள்ளது என்றும் தெரிவித்த நீதிபதி, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததை ஒரு வழக்கமாகவே அதிகாரிகள் வைத்துள்ளனர் எனவும் இதை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.

மனுதாரரின் கோரிக்கையை அதிகாரிகள் 4 வாரத்தில் நிறைவேற்ற வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, தவறினால் அதிகாரிகள் மீது நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments