குடிபோதையில் தந்தையை கொலை செய்த மகன்

0 709

ஆந்திராவில் முதியோர் உதவித் தொகையை வழங்க மறுத்த தந்தையை குடிபோதையில் கழுத்தை நெரித்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

கிருஷ்ணா மாவட்டம் சந்திரலபாடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஷேக் ஷீலாத். குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர், தந்தையின் முதியோர் உதவித் தொகையான 2250 ரூபாயை மது குடிப்பதற்காக கேட்டுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரம் அடைந்த ஷேக் ஹீலாத், தந்தை மெஹபூப் சாஹிப்பிடம் நீண்ட நேரம் தகராறு செய்து கழுத்தை நெரித்தும், தாக்கியும் துன்புறுத்தியுள்ளார்.

இதனால் மயக்கம் அடைந்த தந்தை மெஹபூப் சாஹிப் விஜயவாடா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கழுத்து நெரிக்கப்பட்டதால் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். தந்தையை கொலை செய்ததாக மகன் ஷேக் ஷீலாத்தை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் தந்தையை தாக்கிய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments