கால்நடை தீவன வழக்கில் லாலு பிரசாத்துக்கு ஜாமீன்

0 688

பீகார் மாநிலத்தில் நடந்த கால்நடை தீவன ஊழல் வழக்கில், தியோகர் கருவூலத்தில் இருந்து முறைகேடாக பணம் எடுத்த வழக்கில், லாலு பிரசாத் யாதவுக்கு ஜார்க்கண்ட் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத், பீகார் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில், கால்நடை தீவனம் வாங்கியதில் பெருமளவில் முறைகேடுகள் நடந்தன.

இதுதொடர்பாக, லாலு பிரசாத் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. 3 வழக்குகளில் தீர்ப்பு கூறப்பட்ட நிலையில், அவர் ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டார்.

கால்நடை தீவனம் வாங்க தியோகர் கருவூலத்தில் இருந்து 79 லட்சம் ரூபாய் பெறப்பட்டதில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கில் மூன்றரை ஆண்டுகள் சிறைதண்டனை பெற்றுள்ள லாலு பிரசாத் இவ்வழக்கில் ஜாமீன் கேட்டு ஜார்க்கண்ட் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.

இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், லாலு பிரசாத்துக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கில் லாலு பிரசாத் 26 மாதங்கள் சிறை தண்டனை அனுபவித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments