விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற உழவன் கைபேசி செயலி

0 841

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால், கடந்த ஏப்ரல் மாதம், 9 முக்கிய சேவைகளுடன் அறிமுகப்படுத்தப்பட்ட உழவன் கைபேசி செயலியை, இதுவரை நான்கரை லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளதாக, சட்டப்பேரவையில், முன்வைக்கப்பட்ட வேளாண்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, இச்செயலியில் 6 முக்கிய கூடுதல் சேவைகள் இணைக்கப்பட்டு மொத்தம் 15 சேவைகளை தமிழக விவசாயிகளுக்கு வழங்கி வருவதாகவும், வேளாண்மைத்துறை கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பயிர்களை நடவு செய்யும் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக பயிர் எண்ணிக்கையினை நிலைப்படுத்த, இயந்திர நடவு செய்யும் விவசாயிகளுக்கு கடந்தாண்டு 55 கோடியே 35 லட்ச ரூபாய் மானியமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் நடப்பாண்டிலும், இத்திட்டம் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments