கஜா புயலின்போது மின்சாரத்துறைக்கு ரூ.2,380 கோடி செலவு

0 456

கஜா புயல் பாதிப்புகளின் போது மின்சாரத்துறைக்கு 2 ஆயிரத்து 380 கோடி ரூபாய் செலவு ஏற்பட்டதாக அமைச்சர் தங்கமணி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

வேளாண்துறை மானியக்கோரிக்கை விவாதத்தில் பேசிய திமுக எம்எல்ஏ பிரகாஷ் தட்கல் முறையில் மின் இணைப்புகள் வழங்கப்படுவதினால் விவசாயிகள் நகைகளை கூட அடகு வைத்து மின்இணைப்பு பெறும் நிலை உள்ளதாகவும், அம்முறையை ரத்து செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

அப்போது குறிக்கிட்ட மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, இலவச மின் இணைப்புகள் கோரி விண்ணப்பித்துள்ள அனைத்து விவசாயிகளுக்குமே வரிசைப்படி இலவச மின் இணைப்புகள் வழங்கப்படுவதாகவும், தட்கல் முறை என்பது வசதியுள்ள பெரு விவசாயிகள் மட்டுமே கட்டணம் செலுத்தி பெறுவதாகவும் தெரிவித்தார்.

மற்றபடி பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கப்படுவதாகவும், அமைச்சர் தங்கமணி கூறினார். மேலும், வருங்காலத்தில் 40 ஆயிரம் மின் இணைப்புகள் வழங்க திட்டமுள்ளதாகவும் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments