தமிழ் மொழி விவகாரம் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் மனு

0 443

உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் உடனுக்குடன் மொழி பெயர்க்கப்படும் மொழிகளின் பட்டியலில் தமிழையும் சேர்க்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியை நேரில் சந்தித்து மனு கொடுத்து கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார்.

உத்தேசிக்கப்பட்டிருக்கும் மொழிகளின் முதல் பட்டியலிலேயே தமிழையும் சேர்ப்பது குறித்த கோரிக்கையை பரிசீலித்து, விரைவில் நல்ல முடிவை எடுப்பதற்கு தலைமை நீதிபதி ஒப்புக் கொண்டதாக திமுக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாத இறுதியிலிருந்து உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை ஏக காலத்தில் மொழி பெயர்ப்பு செய்து உச்சநீதிமன்ற இணையதளத்தில் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் மாநில மொழிகளான அஸ்ஸாமி, இந்தி, கன்னடம், மராத்தி, ஒடியா மற்றும் தெலுங்கு ஆகியவற்றுடன் தமிழையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக, திமுக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments