இயக்குநர் பாரதிராஜா மீதான வழக்கு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் தடை

0 601

இயக்குநர் அமீருக்கு ஆதரவாக பேசியதற்காக, இயக்குநர் பாரதிராஜா மீது திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

கடந்த ஆண்டு கோவையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியது தொடர்பாக  இயக்குனர் அமீர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.

இதுதொடர்பாக, கடந்த ஆண்டு ஜூன் 21ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இயக்குநர் பாரதிராஜா, தமிழகத்தில் மாவோயிஸ்டு அல்லது நக்ஸலைட்டு அமைப்புகள் உருவாகும் நிலையை ஏற்படுத்திவிட வேண்டாம் என பேசியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் மீதான விசாரணைக்கு தடைகோரி பாரதிராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, திருவல்லிக்கேணி காவல் ஆய்வாளர் முரளி தாக்கல் செய்த அறிக்கையில், நாராயணன் புகார் மீது விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தயாரித்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர வடபழனி உள்ளிட்ட காவல் நிலையங்களில் தலா ஒரு வழக்கு நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு, பாரதிராஜாவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.

இதன்பின்னர் திருவல்லிக்கேணி காவல் நிலைய விசாரணைக்கு தடை விதித்த நீதிபதி, ஆய்வாளரும், புகார்தாரர் நாராயணனும் 6 வாரத்தில் பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments