அத்திவரதரை தரிசித்த குடியரசுத் தலைவர்

0 1914

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது மனைவியுடன் தரிசனம் செய்தார்.

காஞ்சிபுரத்தில் நடைபெற்று வரும் அத்திவரதர் வைபவத்தைக் காண தனி விமானம் மூலம் சென்னை வந்தார். அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வரவேற்றனர்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் காஞ்சிபுரம் வந்தடைந்தார். பச்சையப்பாஸ் ஆண்கள் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த ஹெலிக்காப்டர் தளத்தில் இறங்கி, அங்கிருந்து குண்டு துளைக்காத கார் மூலம் வரதராஜப் பெருமாள் கோவில் வந்த குடியரசுத் தலைவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டதோடு, பட்டாச்சாரியார்கள் பூரணகும்ப மரியாதை வழங்கினர்.

தொடர்ந்து அத்திவரதரை தரிசனம் செய்த குடியரசுத் தலைவர், கோவில் வரலாற்றையும் அத்திவரதர் வரலாற்றையும் கேட்டறிந்தார். அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின், அத்திவரதரின் பழைய மற்றும் புதிய புகைப்படங்கள் பரிசளிக்கப்பட்டன.

குடியரசுத் தலைவருடன், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் உள்ளிட்டோரும் அத்திவரதரை தரிசனம் செய்தனர். குடியரசுத் தலைவரின் வருகையை ஒட்டி நகரில் மூன்றடுக்குப் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments