உள்ளாட்சி தேர்தல் நடத்தாதற்கு குடிநீர் பிரச்சினை காரணம் இல்லை

0 298

குடிநீர் பிரச்சினைக்கும் உள்ளாட்சி தேர்தலை நடத்தாதற்கும் சம்மந்தம் இல்லை என்று, அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் பேசிய  திமுக எம்எல்ஏ சுந்தர், குடிநீர் பிரச்சனை காரணமாகவே உள்ளாட்சி தேர்தலை  அரசு நடத்தவில்லை என்று தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் வேலுமணி, உள்ளாட்சி தேர்தலை நடத்த தயாராகத்தான் இருக்கிறோம், வார்டு மறுவரையரை முடிந்துவிட்ட நிலையில், நீதிமன்ற தீர்ப்பு வந்த பின்பு கண்டிப்பாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்றார்.

மேலும், குடிநீர் பிரச்சினைக்கும் உள்ளாட்சி தேர்தலை நடத்தாதற்கும் சம்மந்தம் இல்லை என்றும், பருவ மழை பொய்த்து போனது, மற்றும் மரம் வளர்ப்பு குறைந்து விட்டது தான் குடிநீர் பிரச்சினைக்கு காரணம் என்றும், இதை அரசு சரிசெய்து, மழைநீர் சேமிப்பு திட்டத்தை செயல்படுத்த உள்ளதாகவும், குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments