மாநிலத்தின் நீர் வளத்தை பெருக்க முதல்வர் நாராயணசாமி அதிரடி முடிவு..!

0 419

புதுச்சேரியில், மழைநீர் சேகரிப்பு அமைப்புடன் வீடு கட்டாவிட்டால், வீடு கட்ட அனுமதி வழங்கப்படாது என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி, வழுதாவூர் சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மழை நீர் சேகரிப்பு அமைப்பை, முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் மழை நீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்த அரசு முடிவுசெய்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும்  புதிதாக வீடு கட்டுபவர்கள் மழை நீர் சேகரிப்பு அமைப்பை ஏற்படுத்தாவிட்டால், வீடுகட்ட அனுமதி அளிக்க முடியாது என திட்டவட்டமாக கூறிய அவர், குடிநீர் பற்றாக்குறையை போக்க, பிரான்ஸ் நாட்டு அரசு நிதி உதவியுடன் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தையும் செயல்படுத்த உள்ளதாக அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments