டெல்லி மருத்துவமனையின் மேற்கூரையில் திடீர் தீவிபத்து

0 205

டெல்லியில், ஊழியர்களுக்கான மாநில காப்பீடு மாதிரி மருத்துவமனையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.

பாசாய் தாராபூர் என்ற இடத்தில் அமைந்துள்ள இந்த மருத்துவமனையின் அறுவை சிகிச்சை பிரிவின் மேற்கூரையில் திடீரென தீப்பற்றியது. இதனை அறிந்த மருத்துவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதனை அடுத்து 6 தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்த தீயணைப்பு துறையினர் சிறிது நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

முன்னதாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 6 நோயாளிகளும் அங்கிருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இதனால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கும் போலீசார், தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்துவதாக தெரிவிக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments