பாதாள சாக்கடையில் தவறி விழுந்த 3 வயது சிறுவனை தேடும் பணிகள் தீவிரம்

0 382

மும்பையில் பாதாள சாக்கடைக்குள் விழுந்த 3 வயது சிறுவனை தேடும் பணி 30 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

மும்பையில் கோரேகாவ் பகுதியில் திறந்து கிடந்த பாதாள சாக்கடைக்குள் 3 வயது சிறுவன் தவறி விழுந்த சிசிடிவி காட்சி வெளியாகி காண்போரை பதறவைத்தது. கடந்த புதன் கிழமையன்று இரவு பத்தரை மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்ற நிலையில், இரவு பகலாக அச்சிறுவனை தேடும் பணியில் மும்பை தீயணைப்பு துறை வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் மும்பை மாநகராட்சியை சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மும்பையில் சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், பாதாள சாக்கடையில் நீரின் ஓட்டம் வேகமாக இருப்பதாகவும், இதனால் அச்சிறுவன் நீண்ட தூரத்திற்கு நீரில் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என்று தேடுதல் பணியில் ஈடுபட்டு வரும் மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments