பேராசிரியை நிர்மலா தேவி வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

0 1891

தமிழகத்தில் மன அழுத்தம் நிறைந்த பணிகளில் முக்கியமானதாக கருதப்படும் காவல் பணியில் ஈடுபட்டுள்ள இரு பெண் காவலர்கள், தங்களின் மனசோர்வு நீங்க ((மெரீனா)) கடற்கரையில் உற்சாகமாக நடனமாடி டிக் டாக்கில் பதிவிட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது

நிர்மலாதேவி வழக்கில் தொடர்புடைய உயர் அதிகாரிகளை காப்பாற்ற முயற்சி நடைபெறுவதாகவும் எனவே சிபிசிஐடி வசமிருந்து சிபிஐக்கு வழக்கை மாற்ற வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் நிர்மலா தேவி வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்திருந்தது.

நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வில் கடந்த விசாரணையின்போது பேராசிரியை நிர்மலா தேவி யாருக்காக மாணவிகளிடம் அவ்வாறு பேசினார் என்பது குறித்து விசாரணை நடத்தப்படவில்லை என்றும், உயரதிகாரிகள் எனும் ஒற்றை வார்த்தையில் சுருக்கிவிடும் காவல்துறை அவர்கள் யார் என விசாரிக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

அப்போது வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் ஏற்கனவே உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது என அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர்.

இந்நிலையில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், சிபிசிஐடி விசாரித்து குற்றப்பத்திரிக்கை மற்றும் இறுதி அறிக்கை தாக்கல் செய்து வழக்கு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் அதில் நீதிமன்றம் தலையிட முகாந்திரம் இல்லை என்றனர். சாட்சிகளின் அடிப்படையில், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் மேலும் சிலரை கூடுதலாக சேர்ப்பதற்கு விசாரணை நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மேலும் ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்ற விசாரணைக்கு விதித்த தடையையும் நீக்கி உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments