6 வயது மகன் கண் முன்னே தந்தை கழுத்தை அறுத்து படுகொலை

0 662

ராமநாதபுரத்தில்  6 வயது சிறுவன் கண்முன்னே தந்தை கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சொக்கநாதபுரம் பகுதியை சேர்ந்த நாகராஜ் நேற்று மாலை தனது நண்பர்கள் சிலருடன் கீழக்கரை கடற்கரையோரம் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது  அவரது மனைவி வீட்டில் இல்லாததோடு அவரது 6 வயது மகன் மட்டும் வீட்டில் இருந்துள்ளாரர்.

இந்நிலையில் நேற்றிரவு 9 மணியளவில் அவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல்  சிறுவன் கண்முன்னே அவனது தந்தையை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது.சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் நாகராஜ் உடலை மீட்டு கீழக்கரை அரசு மருத்துவமணிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments