மெகுல் சோக்சியின் 24.77கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்

0 500

மெகுல் சோக்சிக்கு சொந்தமான 24 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி, அவரது நெருங்கிய உறவினரான மெகுல் சோக்சியுடன் சேர்ந்து, மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி மூலமாக சுமார்.14 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டார்.

இது தொடர்பாக சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவு இயக்குனரகமும் தனித்தனியே வழக்குகள் பதிவு செய்துள்ளன. நிரவ் மோடி இங்கிலாந்துக்கும், மெகுல் சோக்சி ஆன்டிகுவா பார்புடா நாட்டுக்கும் தப்பினர்.

நிரவ் மோடி கைதாகி, லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மெகுல் சோக்சியை நாடு கடத்திக்கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த நிலையில், உள்நாட்டிலும், துபாயிலும் மெகுல் சோக்சிக்கு சொந்தமான 24 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. இதுவரை மொத்தம் 2534 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments