10 நாட்களில் 1.31 லட்சம் பக்தர்கள் அமர்நாத் யாத்திரையை நிறைவு செய்தனர்

0 650

பயங்கரவாதிகள் அச்சுறுத்தல், மோசமான வானிலை போன்ற சோதனைகளைக் கடந்து, சுமார் ஒரு லட்சத்து 31 ஆயிரம் பக்தர்கள் கடந்த 10 நாட்களில் அமர்நாத் யாத்திரையை நிறைவு செய்துள்ளனர்.

பலத்த பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு மலைப்பாதையில் சுமார் 14 கிலோமீட்டர் நடந்தே சென்று, நீண்ட பயணத்திற்குப் பின்னர் அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். ஜூலை முதல் தேதி இந்த ஆண்டு அமர்நாத் புனித யாத்திரை தொடங்கியது. ஆகஸ்ட் 15ம் தேதியுடன் இது முடிவடைய உள்ளது.

ஜூலை பத்தாம் தேதி நிலவரப்படி பத்தே நாட்களில் சுமார் ஒருலட்சத்து 31 ஆயிரம் பக்தர்கள் இதுவரை யாத்திரையை நிறைவு செய்துள்ளனர்.இது கடந்த ஆண்டை விட அதிக எண்ணிக்கையாகும். மொபைல் ஆப்கள், ஹெலிகாப்டர் சேவைகள், சிசிடிவி கேமரா பாதுகாப்பு போன்றவற்றால் இந்த ஆண்டு பக்தர்களுக்கு கூடுதலான வசதிகள் வாய்த்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments