கோவாவில் பாஜகவில் புதிதாக இணைந்த 10 எம்.எல்.ஏக்கள்

0 869

கோவாவில் பாஜகவில் புதிதாக இணைந்த 10 எம்எல்ஏக்களும் கட்சி தலைவர் அமித்ஷாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

எதிர்க்கட்சித் தலைவர் சந்திரகாந்த் காவலேகர் உள்ளிட்ட பத்து எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். டெல்லி சென்ற அவர்கள் அங்கு பாஜக தலைமையகத்தில் தற்போதைய செயல் தலைவரான ஜே.பி.நட்டாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

முன்னதாக கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த்தையும் சந்தித்த எம்.எல்.ஏக்கள் மத்திய அமைச்சரும் பாஜக தலைவருமான அமித் ஷாவை நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். யாருடைய வற்புறுத்தலும் இல்லாமல் அவர்களாகவே 10 எம்.எல்.ஏக்களும் தங்களது கட்சியில்  இணைந்துள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது.

பாஜகவுக்கு தாவியுள்ள எம்எல்ஏக்கள் சிலருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.2017 ஆம் ஆண்டில் தேர்தலுக்குப் பின் 17 உறுப்பினர்களைக் கொண்டிருந்த காங்கிரசுக்கு, கோவா சட்டமன்றத்தில் தற்போது 5 எம்.எல்.ஏக்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர். பாஜகவின் பலம்  27 ஆக அதிகரித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments