சாலை விபத்தில் உயிரிழந்த செய்தியாளர் குடும்பத்திற்கு அமைச்சர் ஜெயக்குமார் தனது ஒரு மாத சம்பளத்தை வழங்கினார்

0 1406

சாலைவிபத்தில் உயிரிழந்த செய்தியாளர் செந்தில்குமார் குடும்பத்திற்கு அமைச்சர் ஜெயக்குமார் தன்னுடைய ஒருமாத ஊதியத்தை நிதியுதவியாக அளித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியில் பணிபுரிந்த செய்தியாளர் செந்தில்குமார் கடந்த மாதம் பணியின் போது சாலை விபத்தில் உயிரிழந்தார் . இந்நிலையில் சிறப்பு நிதிஉதவியாக அரசு தரப்பில் 1லட்சம் ரூபாய் நிதியுதவியை முதலமைச்சர் அறிவித்திருந்தார். தொடர்ச்சியாக , தலைமைச்செயலகத்தில் செந்தில்குமார் குடும்பத்தாரை வரவழைத்து சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சர் ஜெயக்குமார் அவருடயை ஒருமாத ஊதியத்தை நிதிஉதவியாக அவர்களுக்கு அளித்தார்.

பின்னர் , அரசு அறிவித்துள்ள ஒருலட்சம் உதவித்தொகையை 3 லட்சமாக உயர்த்தி வழங்கவும் ,குடும்பத்தின் எதிர்காலம் கருதி ஏதேனும் அரசு பணி வழங்க கோரியும் அமைச்சரிடம் செந்தில்குமார் மனைவி சர்வேஷ்வரி  மனு அளித்தார். முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்க முயற்சிப்பதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் உறுதியளித்துள்ளார் .

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments