தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பரவலாக பலத்த மழை

0 923

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பரவலாக பலத்த மழை பெய்தது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள ஆசனூர் மலைப்பகுதியில் கன மழை பெய்தது. சுமார் ஒரு மாத காலத்திற்கு பின்னர் இப்பகுதியில் அரை மணி நேரம் மழை கொட்டித் தீர்த்தது. 

வனப்பகுதியில் மழை பெய்ததால், தண்ணீர் தேடி வனவிலங்குகள் ஊருக்குள் நுழையும் சம்பவங்கள் குறையும் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான மழை பெய்தது.

காட்பாடியில் கனமழை கொட்டித் தீர்த்தது. இப்பகுதியில் அனல் காற்று மற்றும் சுட்டெரித்த வெயில் என மாறி மாறி பொதுமக்கள் வதைபட்டுவந்தனர். இந்த நிலையில், காட்பாடி, கழிஞ்சூர், பிரம்மபுரம், சேவூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை கொட்டி தீர்த்தது.

வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments