திரைப்பட இயக்குனர் ஏ.எல்.விஜய் திருமணம்

0 7609

நடிகை அமலாபாலை விவாகரத்து செய்த இயக்குனர் ஏ.எல்.விஜய்க்கு நேற்று திருமணம் நடைபெற்றது.

அஜித்தின் கிரிடீம், விஜய் நடித்த தலைவா, விக்ரம் நடித்த தெய்வ திருமகள் போன்ற படங்களை இயக்கியவர் ஏ.எல்.விஜய். நடிகை அமலாபாலை காதலித்து, 2014 ஆம் ஆண்டு இயக்குனர் விஜய் திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, 2017 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தனர். இந்நிலையில் இயக்குனர் விஜய்,  மண்ணிவாக்கத்தை சேர்ந்த ராஜன்பாபு - அனிதா தம்பதியின் மகள் மருத்துவர் ஐஸ்வர்யாவை நேற்று திருமணம் செய்து கொண்டார்.

சென்னையில் நடைபெற்ற திருமணத்தில் இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இயக்குனர் ஏ.எல்.விஜய்க்கு திரைத்துறையினர் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments