இந்திய விமானப்படையிடம் உள்ள போர் விமானங்கள் எதிரிகளை கலங்கடிக்கும்

0 1075

இந்திய விமானப்படையிடம் உள்ள சுகோய் 30 mki மற்றும் விரைவில் இணைக்கப்பட இருக்கும் ரபேல் போர் விமானங்கள், எந்த ஒரு எதிரியையும் வெல்ல போதுமானவை என்று விமானப்படையின் துணைத் தலைவரான ஏர்மார்ஷல் ஆர்.கே.எஸ்.பஹதவுரியா தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான், சீனா போன்ற அண்டை நாடுகளால் போர் அபாயம் ஏற்பட்டால் வெற்றியை உறுதி செய்ய இந்த போர்விமானங்கள் ஆற்றல் வாய்ந்தவையாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். இவ்விரு வகை போர் விமானங்களும் களத்தில் ஒன்றாக தாக்குதலில் இறங்கினால் எத்தகைய ஆபத்தையும் முறியடிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த பிப்ரவரி 27ம் தேதி இந்தியாவில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் போர் விமானங்கள் ஊடுருவியதைப் போல் மீண்டும் முயற்சித்தால் அந்நாடு பெரும் இழப்புகளை சந்திக்க நேரிடும் என்றும், ரபேல் மற்றும் சுகோய் போர்விமானங்களால் பாகிஸ்தான் உருக்குலைந்து போகும் என்றும் ஏர்மார்ஷல் எச்சரித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments