வயநாடு எம்பியாக ராகுல்காந்தி மக்களவையில் ஆற்றிய முதல் உரை

0 881

வயநாடு எம்பியாக ராகுல்காந்தி மக்களவையில் ஆற்றிய முதல் உரையில் கேரள விவசாயிகளின் பிரச்சினையை எழுப்பினார்.

இதற்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் பதிலளிக்க காரசாரமான விவாதம் நடைபெற்றது. மக்களவையின் விவாத நேரத்தில் தமது தொகுதியில் விவசாயிகளின் பிரச்சினை குறித்து ராகுல்காந்தி பேசினார். வாங்கிய கடனுக்காக 8 ஆயிரம் விவசாயிகளை நோட்டீஸ் அனுப்பி வங்கிகள் மிரட்டுவதாக கூறிய ராகுல்காந்தி, விவசாயிகளை தற்கொலைக்குத் தூண்டும் சட்ட நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதற்கு பதில் அளித்த மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங், விவசாயிகளின் இந்த பரிதாபகரமான நிலைக்கு 49 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்களே காரணம் என்று காங்கிரஸ் கட்சி மீது குற்றம் சாட்டினார். இதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவித்ததால் மக்களவையில் சலசலப்பு ஏற்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments