ஜோலார்பேட்டையில் இருந்து இன்று ரயிலில் சென்னைக்கு வருகிறது குடிநீர்..!

0 659

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து, 50 வேகன்களில் குடிநீருடன் புறப்பட்ட ரயில் சென்னை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது. 

சென்னையில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க, ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வர தமிழக அரசு திட்டமிட்டு, அதற்கான பணிகள் துரிதகதியில் நடைபெற்றன. இதற்காக ஜோலார்பேட்டையில் உள்ள ஒகேனக்கல் கூட்டு குடிநீர் தரைதொட்டியில் இருந்து பார்சம்பேட்டை ரயில் நிறுத்தம் வரை சுமார் மூன்றரை கிலோ மீட்டர் தூரத்துக்கு குழாய்கள் அமைக்கும் பணி நிறைவுற்று, வெள்ளோட்டம் நடைபெற்றது.

அதே போன்று ஜோலார்பேட்டையில் இருந்து ரயிலில் வரும் குடி நீரை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்வதற்கான பணிகளும் சென்னை வில்லிவாக்கம் ஐசிஎப் ரயில்வே பணிமனையில் நிறைவடைந்தது.

இதையடுத்து ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து 50 வேகன்களில் குடிநீருடன் காலை 7 மணியளவில் ரயில் புறப்பட்டது. குடிநீர் மேலாண்மை இயக்குனர் மகேஸ்வரன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

இன்று பகல், ஒரு மணிக்கு மேல் வில்லிவாக்கம் ரயில் நிலையத்தை குடிநீருடன் ரயில் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்கிருந்து, குழாய் வழியாக, கீழ்ப்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு, நீர் கொண்டு செல்லப்பட்டு, சுத்திகரித்து வினியோகிக்கப்படும்.

ஒரு ரயிலில் இரண்டரை மில்லியன் லிட்டர்(( 2.5 MLD )) வீதம், நாளொன்றுக்கு 2 ரயில்களில் 4 முறை என, தினமும் பத்து மில்லியன் லிட்டர் ((10 MLD)) குடிநீர் கொண்டு வரப்பட உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments