உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இங்கிலாந்து

0 2073

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நடந்த இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்தின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ளமுடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் 49 ஓவர்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலியாவால் 223 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது.

224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு ரன்களைச் சேர்த்தது. இதனால் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த அந்த அணி, 33ஆவது ஓவரிலேயே இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதன் மூலம் ஐம்பது ஓவர் உலகக் கோப்பையில் சுமார் 27 ஆண்டுகளுக்கு பின்னர் இங்கிலாந்து அணி மீண்டும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments