கடலூர் மாவட்டத்தில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலை அமைக்கப்படும்

0 171

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிப்காட் தொழில் வளாகத்தில் அமைந்துள்ள தொழிற்சாலைகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய  கடல் நீரை குடிநீராக்கும் ஆலை அமைக்கப்படும் என அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.

தொழில் துறை தொடர்பான 11 புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசிய அவர், கடலூர் மாவட்டத்தில் சிப்காட் வளாகத்தில் நாளொன்றுக்கு 20 மில்லியன் லிட்டர் கொள்திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் ஆலை அமைக்கப்படும் என்றும், தமிழகம் முழுவதும் உள்ள சிப்காட் தொழில் பூங்காக்களின் உள்கட்டமைப்பு வசதிகள் 20 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் என அறிவித்தார். 

தொழில் முனைவோர்கள் தொழில் தொடர்பான அனைத்து சேவைகளையும் அவர்களது இருப்பிடத்திலேயே பெறும் வகையில், சிப்காட் நிறுவனத்திற்கான இணையவழி ஒருங்கிணைந்த மென் பொருள் 1 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் உருவாக்கப்படும் எனவும்,  சென்னை டைடல் பார்க்கில் தொழில் முனைவோர் துவக்கி மையம் (TIDEL start up hub ) ரூபாய் 4.65 கோடி முதலீட்டில் ஏற்படுத்தப்படும் எனவும் அமைச்சர் சம்பத் தெரிவித்தார்..

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments