"சுரங்கங்கள், குவாரிகள் டிரோன்கள் மூலம் கண்காணிக்கப்படும்" - அமைச்சர் சி.வி.சண்முகம்

0 367

தமிழ்நாட்டில் செயல்படும் சுரங்கங்கள் மற்றும் குவாரிகள், ஆளில்லா சிறிய ரக விமானம் மூலம் கண்காணிக்கப்பட உள்ளதாகவும், இனி, சிறுகனிம குவாரிகளும், செயற்கைக்கோள் மூலம் கண்காணிக்கப்படும் என்றும், அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவித்திருக்கிறார்.

சட்டப்பேரவையில் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறை சார்பில் புதிய அறிவிப்புகளை அமைச்சர் சி.வி.சண்முகம் வெளியிட்டார். அதில், 50 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் விதிமுறைகளுக்கு புறம்பாக எடுக்கப்படும் கனிமங்களின் கனபரிமாணத்தை துல்லியமான முறையில் அளவீடு செய்ய ஆளில்லா சிறிய ரக விமானம் மூலம் சுரங்கங்கள் மற்றும் குவாரிகள் கண்காணிக்கப்படும் என்றார்.

அதே போல், பெருங்கனிமச் சுரங்கங்கள் அமைந்துள்ள குத்தகை பரப்பின் எல்லைகளிலிருந்து 500 மீட்டர் சுற்றளவிற்குள் நடைபெறும் சட்டவிரோத சுரங்கப்பணிகள் செயற்கைக்கோள் மூலம் கண்காணிக்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதேபோல், சிறுகனிம குவாரிகளும் கண்காணிக்கப்படும் என அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவித்தார். இதுதவிர குவாரி தொழிலாளர்களை காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சண்முகம் தெரிவித்தார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments