வட்டார வளர்ச்சி அலுவலகமா? மதுபானக் கூடமா? அதிர்ச்சியடைந்த மாவட்ட ஆட்சியர்

0 563

ராமநாதபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மேற்கொண்ட திடீர் சோதனையில், மது பாட்டில்கள் குவிந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மதுக்குடிக்கும் இடத்தை விட கேவலமாக அலுவலகம் காட்சியளித்ததை அடுத்து, அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

உலக மக்கள் தொகை தினத்தை கொண்டாடும் விதமாக ராமநாதபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மரக்கன்று நாடும் விழா நடைபெற்றது. காலை 9.30 மணிக்கு விழா தொடங்க இருந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் வீர ராகவராவ் 9 மணிக்கு எல்லாம் வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திற்கு வந்தார். ஆனால் அவர் வந்த போது வட்டார வளர்ச்சி அலுவலர் ராம மூர்த்தி, மற்றொரு அலுவலரான பாண்டி, உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் என யாரும் வந்திருக்கவில்லை. இதனால் அலுலவகத்திற்குள் சென்று பார்த்த ஆட்சியர், யாருமே வரவில்லையா என்ற படியே வெளியே வந்தார். 

விழாவை ஒட்டி மரக்கன்று நட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அரச மரக்கன்று ஒன்றை அலுவலகத்தின் சுவருக்கு அருகிலேயே நடும் வகையில் குழி தோண்டி வைத்திருத்தனர். இதை கண்டு திடுக்கிட்ட ஆட்சியர், அலுவலக சுவற்றுக்கு அருகில் இதனை நட்டால், வளர்ந்த பின், அலுவலகத்திற்கு ஆபத்து வரும் என்பதை சுட்டிக்காட்டினார். வெறும் கண்துடைப்புக்கு மரக்கன்று நடாமல், உண்மையிலேயே மரம் வளர்க்க வேண்டும் என்று சலித்துக் கொண்ட அவர், வேறு இடத்தில் குழி தோண்ட சொன்னார்.

குழி தோண்டும் வரை சும்மா இருக்க வேண்டாமென்று நினைத்த வீர ராகவ ராவ், அலுவலக வளாகத்தை சுற்றி பார்க்க நடந்தார். முதலில் அவர் பார்த்த காட்சியே அதிர்ச்சி தருவதாய் இருந்தது. அங்கு மழை நீர் சேகரிக்க தோண்டிய குழியில் குப்பைகளை கொட்டி வைத்திருந்தனர். ஒரு புறம் பல நாட்களாக அகற்றப்படாத குப்பைகள் தேங்கி கிடந்தன.

அலுவலக பராமரிப்பை கவனிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் ராம மூர்த்தி வராத நிலையில், அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டார் வீர ராகவ ராவ். மழை நீருக்கு பதில் குப்பையை சேகரித்து அலுவலகத்தை அழகாக வைத்திருக்கிறீர்கள் என  அதிகாரியிடம் சிறிது நேரம் பேசியஆட்சியர் தொடர்பை துண்டித்துவிட்டு அடுத்த இடம் நோக்கி நகர்ந்தார்.

கொஞ்சம் தூரம் சென்ற போது அலுவல குப்பை தொட்டி கண்ணில் பட, எட்டி பார்த்த ஆட்சியர் மிரண்டு போனார். அதற்குள் ஒஸ்தி சரக்கு பாட்டில்கள் குவிந்து கிடந்தன. அரசு அலுவலக குப்பை தொட்டியில் மது பாட்டில்கள் குவிந்து கிடப்பதை பார்த்து ஆத்திரமடைந்த ஆட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் ராம மூர்த்தி மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments