தேனியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்

0 1049

தேனி மாவட்டம் பொட்டிப்புரத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.  

தேனி மாவட்டத்தில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில், பொட்டிபுரம் கிராமம் அருகே, ராமகிருஷ்ணாபுரம் அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைத்து, நியூட்ரினோ துகள்களை ஆய்வு செய்ய, மத்திய அரசு திட்டமிட்டது.
மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கியதை தொடர்ந்து, 2015ல், திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு சமூக செயற்பாட்டாளர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளிடம் இருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்தன.

இந்த நிலையில் மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திரசிங் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், தேனி மாவட்டம் பொட்டி புரத்தில், நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு ஒப்பதல் அளித்துள்ளதாக தெரிவித்தார். இந்தியாவிலேயே முதன்முறையாக, அங்கு நியூட்ரினோ மையம் அமைய உள்ளது என்றும், 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு மலையை குடைந்து நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கப்படுகிறது எனவும் அவர் குறிப்பிட்டார். நியூட்ரினோ ஆய்வகத்தால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று உறுதி அளித்ததுடன், கதிர்வீச்சு அபாயமும் ஏற்படாது எனவும் அவர் விளக்கம் அளித்தார்.

நியூட்ரினோ என்பது, மின்னியல் ரீதியில், நேர்மறை, எதிர்மறை இன்றி, நடுத்தன்மை உடைய நுண்துகள். எலக்ட்ரானை ஒப்பிடுகையில், இதன் அடர்த்தி, மிகக் குறைவு. கதிரியக்க தாக்கத்தால், நியூட்ரினோ உருவாகிறது. நியூட்ரினோ ஆராய்ச்சி மூலம், புவியின் உள்கட்டமைப்பை தெரிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments