அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள கிரானைட் குவாரிகளை ஏலம் விடும் நடவடிக்கை தீவிரம்

0 268

அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள கிரானைட் குவாரிகளை ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு வருவதாகவும், இன்னும் இரு மாதத்தில் ஏலம் விடப்படும் என்றும்,அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்திருக்கிறார்.

சட்டப்பேரவையில், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, திமுக சட்டமன்ற உறுப்பினர் இன்பசேகரன், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் உள்ள கிரானைட் குவாரிகள் மூடப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் சிவி சண்முகம், மத்திய சுற்றுச்சூழல் துறை அளித்த உத்தரவின் பேரில்தான் தமிழகத்தில் 1099 குவாரிகள் மூடப்படுவதாகவும், இந்தியா முழுவதும் இதே நிலை தான் என்றார்.

மேலும், அவற்றை திறக்க தமிழக அரசு மேற்கொண்ட முயற்சியின் காரணமாக, மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழு மூலம் உரிமையை பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் மூடப்பட்டுள்ள கிரானைட் குவாரிகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும், அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள கிரானைட் குவாரிகளை ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டுள்ளதாக, அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், தாதுமணல் எடுப்பதற்கு உரிமம் பெற்றவர்களிடம் விளக்கம் கேட்டு அரசு தரப்பில் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும், தனியார் யாரும் தாதுமணல் எடுப்பதற்கு அனுமதி கிடையாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது என்றும் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியிருக்கிறார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments