உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஆனந்த்குரோவர், இந்திரா ஜெய்சிங் வீடுகளில் சி.பி.ஐ. சோதனை

0 439

என்.ஜி.ஓ. அமைப்புக்கு வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கில் பணம் பெற்றதில் மோசடி நடந்ததாக எழுந்த புகாரின் பேரில், உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் தம்பதியின் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்களாக இருப்பவர்கள் ஆனந்த் குரோவர் மற்றும் அவரது மனைவி இந்திரா ஜெய்சிங், இவர்கள் இருவரும் “லாயர்ஸ் கலெக்டிவ்” என்ற என்.ஜி.ஓ. அமைப்பை நடத்தி வருகிறார்கள். இந்த என்.ஜி.ஓ. அமைப்புக்கு வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கில் வரும் பணத்தை வக்கீல் தம்பதிகள் இருவரும் முறைகேடாக பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்தன.

கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை அவர்கள் மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் பெறாமல் வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக பணம் பெற்றதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் சி.பி.ஐ. அதிகாரிகள், ஆனந்த் குரோவர், இந்திரா ஜெய்சிங் ஆகியோருக்கு சொந்தமான வீடுகளிலும், அலுவலகங்களிலும்,
டெல்லி, மும்பையில் உள்ள அவர்களுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments