பாக்.. உள்பட அனைத்து நாட்டு வீரர்களுக்கும் விசா வழங்கப்படுமா ?

0 571

இந்தியாவில் நடைபெறும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளுக்கு தகுதியுள்ள பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா வழங்கப்படும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ பதிலளித்துள்ளார்.

மக்களவையில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரான கிரண் ரிஜிஜூவிடம் பாகிஸ்தான உள்பட வெளிநாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு விசா வழங்கப்படுமா? என கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த கிரண் ரிஜிஜூ, இந்திய அரசின் கொள்கைப் படி தேசிய ஒலிம்பிக் கமிட்டியால் அங்கீகரிக்கப்பட்ட தகுதியுள்ள விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு விசா அனுமதி வழங்கப்படும் என கூறியுள்ளார்.

மேலும் சர்வதேச விளையாட்டுக் கூட்டமைப்பின் கீழ் இணைந்த தேசிய விளையாட்டுக் கூட்டமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட வீரர், வீராங்கனைகளுக்கு விசா வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments