”நாவலர் நெடுஞ்செழியனுக்கு அரசு விழா” துரைமுருகன் கோரிக்கை - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

0 457

நூற்றாண்டை கண்ட நாவலர் நெடுஞ்செழியனுக்கு அரசு சார்பில் விழா எடுக்கப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் பேசும் போது, பெரியார், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவோடு பணியாற்றிய சிறப்பு பெற்றவரும், நடமாடும் பல்கலைக்கழகம் என போற்றப்படுபவரும், அடிப்படை திராவிட கொள்கையிலிருந்து மாறுபடாதவருமான நாவலர் நெடுஞ்செழியனின் நூற்றாண்டை சிறப்பிக்கும் வகையில், தமிழக அரசு அவருக்கு சிறப்பு செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இதற்கு பதிலளித்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நாவலரின் நூற்றாண்டு குறித்து முதல்வரிடம் ஆலோசனை நடத்தியதாகவும், திராவிட இயக்கத்தின் தூணான நெடுஞ்செழியனுக்கு தனி விழாவாக அரசு சார்பில் விழா எடுக்கப்படும் என்றார். அந்த விழாவில் நாவலரின் பெயர் வரலாற்றில் இடம் பெறும் வகையில், புதிய அறிவிப்பை, முதலமைச்சர் வெளியிடுவார் என்றும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments