"தோனி ஐந்தாவது வீரராக களமிறங்கி இருந்தால்..." ஜாம்பவான்கள் கருத்து

0 1675

நியுசிலாந்துக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் தோனி ஐந்தாவது வீரராக களமிறங்கி இருந்தால் போட்டி மாறி இருக்கும் என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் 240 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் இந்திய அணி தோற்றது. மகேந்திரசிங் தோனி இறுதி வரை போராடிய போதும், ஏழாவது நபராக அவர் களமிறங்கியது தான் போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டதாக முன்னாள் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, விவிஎஸ் லக்ஷமண் ஆகியோர் கவலை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள சச்சின் டெண்டுல்கர், ஹர்திக் பாண்ட்யாவுக்குப் பதில் ஐந்தாவது நபராக தோனி களமிறங்கி இருந்தால் நிச்சயம் ஏதாவது செய்து போட்டியில் மாற்றத்தை ஏற்படுத்தி இருப்பார் என்று கூறியுள்ளார். இறுதி வரை போராடிய அவர், ஜடேஜாவுக்கு அவ்வப்போது ஆலோசனைகள் வழங்கி போட்டியை கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகவும் டெண்டுல்கர் பாராட்டினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments