நோட்டாவுக்கு வாக்களிப்பது யார்..?

0 447

ஒவ்வொரு தேர்தலிலும், வேலை கிடைக்காதவர்கள் தான் நோட்டாவுக்கு வாக்களிப்பதாக, திமுக உறுப்பினர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் தெரிவித்திருக்கிறார்.

சட்டப்பேரவையில் இன்று தொழில் துறை மற்றும் சிறு குறு தொழில் துறைகளின் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய ராமசந்திரன், அமைச்சர்களை நோக்கி, தேர்தலில் நோட்டாவுக்கு வாக்களிப்பவர்கள் எல்லாம் யார் என நினைக்கிறீர்கள், அவர்கள் எல்லாம் படித்த மற்றும் வேலை வாய்ப்பு கிடைக்காத இளைஞர்கள் தான் என கூறினார்.

படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்காததற்கு அரசு தான் காரணம், அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் எனவும் பேசினார். எனவே, படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திதரும் வகையில், தமிழ்நாடு அரசு தொழிற்சாலைகளையும், முதலீடுகளை ஈர்க்கும் பணிகளை மேற்க்கொள்ள வேண்டும் என்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் கேட்டுக்கொண்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments