லாரியில் இருந்து சிதறிய பணத்தை எடுத்து சென்ற மக்கள்

0 2019

அமெரிக்காவின் ஜார்ஜியாவில் லாரியில் இருந்து சிதறிய பணத்தை மக்கள் சாலையில் இருந்து அள்ளிச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

ஆஷ்ஃபோர்ட் டன்வுட்டி (Ashford Dunwoody) நெடுஞ்சாலையில் பணம் ஏற்றிச் சென்ற லாரியில் திடீரென கதவு திறந்த காரணத்தினால் ஒரு லட்சத்து 75 ஆயிரம் டாலர் நோட்டுக்கள் சிதறின.

இதைக் கண்ட வாகன ஓட்டிகள் தங்களது கார்களை சாலையோரம் நிறுத்தி, சிதறிய பணத்தை எடுத்துச் சென்றனர்.

பணம் சாலையில் கிடப்பதைக் கண்டதும் அதை எடுக்க வேண்டும் என்ற மக்களின் ஆர்வம் புரிவதாகவும், ஆனாலும் இது திருட்டுக்குச் சமம் என்பதால் நேர்மையோடு வந்து திருப்பித் தருமாறும் டன்வுட்டி காவல்துறை கோரியுள்ளது.

பணத்தின் சீரியல் எண்கள் தங்கள் வசம் இருப்பதாகவும் காவல்துறை சுட்டிக்காட்டியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments