குப்பையிலிருந்து மின்சாரம் கோவை மாநகராட்சியில் தொடக்கம்

0 365

காய்கறி கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை கோவை மாநகராட்சி தொடங்க உள்ளது. இதுகுறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு

மின்சார தயாரிப்பை சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் செய்ய மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை தீட்டி வருகின்றன. இந்த வகையில் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் முறையும் ஒன்று.  கோவை மாநகராட்சியில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 850 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. இவற்றை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரிப்பதோடு, மக்கும் குப்பைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கவும் மாநகராட்சி நிர்வாகம் திட்டம் தீட்டி உள்ளது.

மேலும் காய்கறி கழிவுகளில்  இருந்து மின்சாரம் தயாரித்தல், காற்று மாசு அறிதல் உள்ளிட்ட திட்டங்களுக்கு, இரண்டு கோடி ரூபாயை சுவிட்சர்லாந்து அரசு கோவை மாநகராட்சிக்கு வழங்கியுள்ளது. அந்த நிதியினை கொண்டு கோவை பாரதி பார்க் அருகே உள்ள மாநகராட்சி பணிமனை வளாகத்தில், 45 லட்ச ரூபாய் செலவில் மின்உற்பத்தி நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

உழவர் சந்தையில் இருந்து நாள் ஒன்றுக்கு அகற்றப்படும் 1.5 டன் காய்கறி கழிவுகளை கொண்டு தினம் தோறும் 100 யூனிட் மின்சாரம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மின்சாரத்தை, மாநகரட்சி அலுவலக பயன்பாட்டிற்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இன்னும் 15 நாட்களில், பரீட்சார்த்த முறையில் மின் உற்பத்தி செய்யவும், அடுத்த 15 நாட்களுக்குள் மின் உற்பத்தியை நடைமுறைக்கு  கொண்டு வரவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments