பெண் பிரிவினைவாத தலைவரின் சொத்துகள் பறிமுதல்

0 664

ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாத கட்சியின் பெண் தலைவர் ஆசியா அன்ட்ராபி என்பவரின் வீடு உள்ளிட்ட சொத்துகளை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

தீவிரவாதத்திற்கு நிதி திரட்டியதாக எழுந்த புகாரை விசாரித்து வரும் என்.ஐ.ஏ.அதிகாரிகள் பல்வேறு பிரிவினை வாத தலைவர்களின் பணப்பரிவர்த்தனைகளை கண்காணித்து வருகின்றனர். இதில் துக்தாரன் இ மில்லத் என்ற காஷ்மீர் பிரிவினைவாத கட்சியின் தலைவி ஆசியா சிக்கியுள்ளார். ஏற்கனவே ஷபீர் ஷா என்ற மற்றொரு பிரிவினைவாத தலைவருடன் கைது செய்யட்ட ஆசியா டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று அவருடைய வீடு உள்ளிட்ட உடைமைகளை அதிகாரிகள் கைப்பற்றி அனுமதி பெறாமல் யாரும் உரிமை கோரவோ விற்பனை செய்யவோ முடியாது என்று எச்சரித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments