திமுகவுக்கு மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி சவால்

0 1025

திமுக ஆட்சி காலத்தில் தொழிலாளர் நலத்துறையில் நிரந்தரம் செய்யப்பட்டவர்களின் பட்டியலை வழங்க தயாரா? என, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி சவால் விடுத்திருக்கிறார்.

மானிய கோரிக்கை மீதான விவாத்தில் பேசிய திமுக உறுப்பினர் தா.மோ.அன்பரசன், திமுக ஆட்சியில் 8 லட்சம் தற்காலிக ஊழியர்களை நிரந்தரப்படுத்தியதாகவும், அதிமுக ஆட்சியில் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் 480 நாட்கள் தொடர்ந்து பணியாற்றியும் நிரந்தரப்படுத்தப்படாமல் உள்ளதாகவும் தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் தங்கமணி, திமுக எம்எல்ஏ தா.மோ.அன்பரசன் செல்வது போல் 8 லட்சம் பேர் நிரந்தரப்படுத்தப்பட்டது எந்த எந்த நிறுவனங்களில் என்பதை பட்டியலிட முடியுமா? என்றார். நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடர் முடிவதற்குள், முன்னாள் அமைச்சரான தா.மோ.அன்பரசன், அவையிடம், பட்டியலை வழங்க முடியுமா எனவும், அமைச்சர் தங்கமணி சவால் விடுத்திருக்கிறார்.

தொடர்ந்து பேசிய தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தமிழ்நாட்டில் தொழில் தொடங்கும் எந்த நிறுவனமாக இருந்தாலும், உள்ளூர் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற விதிமுறையின் அடிப்படையிலேயே, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments