குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய நற்பண்புகள்..!

0 1615

பெற்றோர்கள் தங்களின் குழந்தைக்கு கற்றுக்கொடுக்க விரும்பும் பண்புகளை, முதலில் நீங்கள் பயிற்சிசெய்து கொள்ள வேண்டும். ஏனெனில், உங்களைப் பார்த்துதான் உங்கள் குழந்தை பின்பற்ற ஆரம்பிக்கும்.

image

உதாரணமாக, எதையாவது கேட்கும்போது, "தயவு செய்து" (please) என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதையும், எதையாவது பெறும்போது, "நன்றி" (Thank You) என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதையும் உங்கள் குழந்தைக்கு சொல்லித்தர விரும்பினால், அந்தப் பண்புகளை முதலில் நீங்கள் தவறாமல் பின்பற்ற தொடங்க வேண்டும்.

நற்பண்புகள்:

நம்முடைய குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே வாழ்வியலின் அடிப்படை குணங்கள், நற்பண்புகள், மாதிரிகள், வழிகாட்டுதல்கள், உதவுதல் மற்றும் பாராட்டுதல் உள்ளிட்ட பல்வேறான வழிமுறைகளின் மூலமாக கற்றுத் தரலாம்.

image

வழிமுறை:
 
நல்ல பண்புக்கூறுகள் என்பது, நடத்தைமுறை, நாகரீகம் மற்றும் ஒழுக்கம் ஆகிவற்றோடு தொடர்புடையது. இப்பண்புகளை, மாதிரிகள், வழிகாட்டுதல்கள், உதவுதல் மற்றும் பாராட்டுதல் உள்ளிட்ட பல்வேறான வழிமுறைகளின் மூலமாக குழந்தைக்கு கற்றுத் தரலாம்.
 
image
 
ஒரு குழந்தை தனது நடத்தையில் சற்று வழுக்கினால், அதை நாம் கடுமையாக கையாளக் கூடாது. நம் குழந்தை ஒரு பொது இடத்தில் கோபமாகவோ அல்லது வெறுப்பாகவோ நடந்துகொண்டு, அதன்மூலம் மற்றவர்கள் நம்மை கவனிக்கும் சூழல் ஏற்பட்டால், அந்த நேரத்தில், குழந்தை எதற்காக அவ்வாறு நடந்துகொண்டது என்பதை உணர்ந்து, குழந்தையை ஆறுதல் படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமே தவிர, குழந்தையை தண்டிக்கக்கூடாது. குழந்தை ஒரு சிறப்பான செயலை மேற்கொண்டால், அதை நல்ல முறையில் பாராட்ட வேண்டும்.
 
வெறுப்புணர்சி:
 
நமது பக்கத்து வீடுகளில் உள்ள குழந்தைகளுடன் விளையாட அனுமதிக்கலாம். வெளியில் அழைத்துச் செல்லாம். பொது இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், பெரியவர்கள், ஆசிரியர்கள், உடன் பிறந்தவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுங்கள். அவர்களிடம் வெறுப்புணர்சியை தூண்டும் விதமாக நடந்து கொள்ள வேண்டாம்.
 
விளையாட்டு:
 
உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் விளையாட சொல்லிக்கொடுங்கள். அவர்களுடன் நீங்களும் சேர்ந்து விளையாடுங்கள், உதாரணத்திற்க்கு மிதிவண்டி (cycle) ஓட்ட பயிற்சியளிக்கலாம், அவர்களுடன் சேர்ந்து மட்டைப்பந்து (Cricket) விளையாடலாம்.
 
image
 
மேலும் அவர்களுக்கு சிறுவயதிலேயே தீய பழக்கங்களின் எதிர்கால விளைவுகள் குறித்து எடுத்து கூறுங்கள் (5ந்து வயதிற்க்கு மேல் இருந்தால்). தீய பழக்கத்தினால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து விரிவாக எடுத்துக் கூறலாம். 
 
 
SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments