நீம் திட்டம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் - அமைச்சர் நிலோபர் கபில் பதில்

0 475

நீம்" திட்டம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதாக, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

பேரவையில் தொழிலாளர் மானியக்கோரிக்கையில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் தா.மோ.அன்பரசன், நீம் என்று அழைக்கக்கூடிய தேசிய வேலைவாய்ப்பு உயர் திட்டத்தின் மூலமாக, பணியில் சேர்பவர்களுக்கு 3 ஆண்டுகள் பயிற்சி வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

இதில் தொழிலாளர்களுக்கு கிடைக்ககூடிய ஈஎஸ்ஐ பிஎப் போன்றவை கிடையாது என்றும், விபத்து ஏற்பட்டாலும் பாதுகாப்பு இல்லை என்றும், நிரந்திர பணி உத்திரவாதமோ முறையான ஊதியமோ வழங்கப்படுவது இல்லை எனவும் கூறினார்.

தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் இத்திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த கூடாது என்றார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் நிலோபர் கபில், நீம் திட்டம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதாக தெரிவித்தார். மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்றபின்பு சிறந்த முறையில் பயிற்சி பெற்று இருந்தால் அவர்கள் அதே தொழிற்சாலையில் நிரந்தரமாக பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என அமைச்சர் விளக்கம் அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments