பல்வேறு இடங்களில் பரவலாக மழை

0 671

சேலம், விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களின் சில பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

சேலம் மாவட்டம் எடப்பாடி, கொங்கணாபுரம், வெள்ளாண்டிவலசு, ஆலச்சம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய மழை பெய்தது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், கிருஷ்ணன் கோவில், சுந்தரபாண்டியம், நத்தம்பட்டி, பட்டிஓடை உள்ளிட்ட பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது.

கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்த நிலையில், திடீரென பெய்த மழையால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான நாயுடுபுரம், வில்பட்டி, கீழ்மலை, பண்ணைக்காடு உள்ளிட்ட இடங்களிலும் அரை மணி நேரமாக மிதமான மழை பெய்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments